அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
தேர்வில் கதை எழுத வேண்டாமென்ற ஆசிரியர்..! தொழிலாக மாற்றிய பிரதீப்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது கல்லூரி தேர்வுத் தாளை இன்ஸ்டாவில் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே மூலம் பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கல்லூரி காதல் கதையாக உருவான இதில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் பிரதான வேடங்களி்லும் நடித்துள்ளனர்.
பிப். 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இதன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் தனது கல்லூரியில் எழுதிய தேர்வுத் தாளை பகிர்ந்துள்ளார். அதில் அவரது ஆசிரியர் தேர்வில் கதை எழுத வேண்டாமெனக் கூறியிருப்பார்.
அதைக் குறிப்பிட்டு பிரதீப் கூறியதாவது:
ஆசிரியர் என்னை தேர்வில் கதை எழுத வேண்டாமெனக் கூறினார். ஆனால், நான் கதை எழுதுவதையே எனது தொழிலாக மாற்றிக் கொண்டேன். இந்தத் தாளில் அழகான கமெண்ட் எழுதியது என்னுடைய ஆசிரியர் அருள்.
டிராகன் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
பின்குறிப்பு: இது அலகுத் தேர்வுதான். முக்கியமான தேர்வுக்கு நன்கு படித்தேன் எனக் கூறியுள்ளார்.