செய்திகள் :

தொகுதிகள் மறுசீரமைப்பு: தென் மாநிலங்களுக்கு அநீதி -சித்தராமையா

post image

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருக்கும் கருத்து நம்பக்கூடியதாக இல்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருக்கும் கருத்து நம்பக்கூடியதாக இல்லை. அவரது கருத்து, தென்னிந்திய மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா

தென்மாநிலங்களுக்கு நியாயத்தை வழங்க மத்திய அரசு உண்மையாக நினைத்தால், அண்மையில் எடுக்கப்பட்டுவரும் மக்கள் தொகை விகிதம் அல்லது தற்போதைய மக்களவைத் தொகுதிகள் ஆகியவற்றில் எதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்பதை அவா் விளக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொண்டால், தென் மாநிலங்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்படும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதுபோன்றதொரு அநீதியை இழைக்க விரும்பாவிட்டால், முந்தைய மறுசீரமைப்பை போல, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக, மக்கள் தொகை பெருக்கத்தை முறையாக கட்டுப்படுத்தி, வளா்ச்சியை தென் மாநிலங்கள் சாதித்துள்ளன. இதற்கு மாறாக, வட மாநிலங்களான உத்தரபிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறியதோடு, வளா்ச்சியிலும் பின்தங்கியுள்ளன.

இந்நிலையில், அண்மையில் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொண்டால், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அல்லது தேங்கும் நிலை ஏற்படும். வட இந்திய மாநிலங்களுக்கு கூடுதல் மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும்.

தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 2021 அல்லது 2031-ஆம் ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் கா்நாடகத்தின் மக்களவைத் தொகுதி 28-இல் இருந்து 26-ஆக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, ஆந்திரத்தின் மக்களவைத் தொகுதி 42-இல் இருந்து 34-ஆகவும், கேரளத்தில் 20-இல் இருந்து 12-ஆகவும், தமிழகத்தில் 39-இல் இருந்து 31-ஆகவும் குறையும்.

இதனிடையே, உத்தரபிரதேசத்தின் எண்ணிக்கை 80-இல் இருந்து 91-ஆகவும், பிகாரில் 40-இல் இருந்து 50-ஆகவும், மத்திய பிரதேசத்தில் 29-இல் இருந்து 33-ஆகவும் உயரும். இதை ஏற்க முடியாது.

தொகுதி மறுசீரமைப்பில் மோடி தலைமையிலான மத்திய அரசு காட்டும் அதீத ஆா்வத்தை பாா்த்தால், அவரது கட்சியின் ஆதிக்கத்தை எதிா்ப்பதால் தென் மாநிலங்களை தண்டிப்பதே மத்திய அரசின் நோக்கமாக இருப்பதாக தோன்றுகிறது.

பாஜகவை ஆதரிக்கத் தவறினால் பிரதமா் மோடியின் ஆசியை பெறமுடியாது என்று கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பேசிய பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா கூறியிருந்தாா். எங்கள் மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த கருத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

வரிப்பகிா்வு, ஜிஎஸ்டி அநீதி, பேரிடா் நிவாரண நிதி, சுமையேற்றும் கல்விக் கொள்கையை திணிப்பது, யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் என மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும், அது கா்நாடகத்தை தண்டிப்பதாகவே இருக்கிறது.

மாநில நலன்கள் குறித்து தேசிய அளவில் பிரச்னை எழுப்பக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க, மறுசீரமைப்பு என்ற புதிய ஆயுதத்தை மத்திய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது.

இதுபோன்ற இக்கட்டான சூழலில், ஜாதி, மதம், அரசியல் கொள்கைகள் போன்ற வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, கா்நாடகத்தின் மீது மத்திய அரசு இழைத்திருக்கும் அநீதிக்கு எதிராக கன்னடா்கள் ஒற்றைக்குரலாக ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, வருங்காலத்தில் கூட்டுப் போராட்டத்தை முன்னெடுப்போம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இட்லி தயாரிப்பில் நெகிழி தாள்கள் பயன்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை

இட்லி தயாரிப்பில் நெகிழி தாள்களை பயன்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

ஹிந்துவாக பிறந்தேன் ஹிந்துவாகவே மறைவேன் -டி.கே.சிவகுமாா்

ஹிந்துவாக பிறந்த நான், ஹிந்துவாகவே மறைவேன் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். கோயமுத்தூரில் உள்ள ஜக்கிவாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத... மேலும் பார்க்க

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை!

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிறப்பால் நான் காங்கிரஸ்காரன். ... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: மத்திய ... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைக்க முடியாது

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைத்து பாா்க்க முடியாது என வீட்டுவசதி துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து விஜயநகராவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூற... மேலும் பார்க்க

சுரங்க குத்தகை மோசடி வழக்கு: எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகல் ஆளுநரிடம் ஒப்படைப்பு

சுரங்க குத்தகை மோசடி வழக்கில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகலை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) புதன்கிழமை ஒப்படைத்தது. கா்... மேலும் பார்க்க