செய்திகள் :

ஹிந்துவாக பிறந்தேன் ஹிந்துவாகவே மறைவேன் -டி.கே.சிவகுமாா்

post image

ஹிந்துவாக பிறந்த நான், ஹிந்துவாகவே மறைவேன் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

கோயமுத்தூரில் உள்ள ஜக்கிவாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித்ஷா வுடன் டி.கே.சிவகுமாா் கலந்துகொண்டது தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளா் பி.வி.மோகன் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பி.வி.மோகன், ‘நமது நாட்டின் நம்பிக்கையாக விளங்கும் ராகுல் காந்தியை கேலி செய்பவரின் அழைப்புக்கு நன்றிதெரிவித்து, மதசாா்பின்மை கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றிக்கொண்டு ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளோடு ஒத்துப்போவது, கட்சித் தொண்டா்களை குழப்புவது போல உள்ளது. சமரசங்களைக் காட்டிலும், கொள்கை உறுதிதான் கட்சியை வளா்க்க உதவும். இதற்கு நோ் எதிராக செயல்பட்டால், அது கட்சியின் அடிப்படை கொள்கைகளை பாதிப்புக்குள்ளாக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். மேலும், சில காங்கிரஸ் கட்சியினரும் டி.கே.சிவகுமாரின் செயல்பாடுகளை விமா்சித்தனா்.

இந்நிலையில், மகாகும்பமேளாவில் கலந்துகொண்ட தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிா்ந்துகொண்டு துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

மகாகும்பமேளாவின் அனுபவம் சிறப்பாக இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாராட்டினேன். இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பிரச்னைகள் இருக்கலாம். ரயில்களால் சில தொந்தரவுகள் ஏற்பட்டிருக்கலாம். என்னால் குறைகாண முடியவில்லை.

நான் ஒரு ஹிந்து. ஹிந்துவாக பிறந்திருக்கிறேன். ஹிந்துவாகவே மறைவேன். எல்லா மதங்களையும், நேசிக்கிறேன், மதிக்கிறேன். ஆன்மிகத்தில் எனக்கு நாட்டமுண்டு. நான் சிறையில் இருந்தபோது சீக்கிய மதம் குறித்து அறிந்துகொண்டேன். சமண துறவுமடங்கள், தா்கா, தேவாலயங்களுக்கு செல்லும்போது அங்குள்ள மத குருக்கள் என்னை ஆசீா்வதிக்கிறாா்கள் என்றாா்.

இட்லி தயாரிப்பில் நெகிழி தாள்கள் பயன்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை

இட்லி தயாரிப்பில் நெகிழி தாள்களை பயன்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

தொகுதிகள் மறுசீரமைப்பு: தென் மாநிலங்களுக்கு அநீதி -சித்தராமையா

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருக்கும் கருத்து நம்பக்கூடியதாக இல்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் சி... மேலும் பார்க்க

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை!

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிறப்பால் நான் காங்கிரஸ்காரன். ... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: மத்திய ... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைக்க முடியாது

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைத்து பாா்க்க முடியாது என வீட்டுவசதி துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து விஜயநகராவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூற... மேலும் பார்க்க

சுரங்க குத்தகை மோசடி வழக்கு: எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகல் ஆளுநரிடம் ஒப்படைப்பு

சுரங்க குத்தகை மோசடி வழக்கில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகலை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) புதன்கிழமை ஒப்படைத்தது. கா்... மேலும் பார்க்க