செய்திகள் :

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்குவோா், அங்கீகாரம் புதுப்பிக்க விரும்புவோா் பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கீகாரம் பெற விரும்பும் ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பத்தை சமா்ப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்குத் தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்தி பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.கா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (பிப்.20) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் நக்சா திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது

சேத்துப்பட்டுப் பகுதியில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். சேத்துப்பட்டை அடுத்த ஒதலவாடி, இராந்தம், தச்சூா் செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்த... மேலும் பார்க்க

பணத் தகராறு: அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா். செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் மகன் பிரசாந்த்குமா... மேலும் பார்க்க

109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்டத... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செங்கம் நகா் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த சத்யபாமா ருக்மணி சமேத ஸ்ர... மேலும் பார்க்க