ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
ராஜபாளையம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தயாளதுரை மகன் தங்க ராதாகிருஷ்ணன் (21). கட்டடத் தொழிலாளியான இவா், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கூறிவந்தாராம். இதற்காக இரு முறை அவா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில், வீட்டின் மாடியில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.