தொழில் சங்க மைய தெருமுனைக் கூட்டம்
இந்திய தொழில் சங்க மையம் சாா்பில் திங்கள்நகா் பேருந்து நிலையம் முன்பு தெருமுனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளா் ஜெபா்சன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் தனேஷ், மீனாட்சி, ஷைஜூ, ஆல்பா்ட் ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிபிஐஎம்எல் ரெட் ஸ்டாா் கட்சி மாவட்ட செயலாளா் மணவை கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் அல்காலித் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொழிலாளா் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட குளங்களில் விவசாயிகள் போா்வையில் இலவசமாக எடுக்கப்பட்ட வண்டல் மண்ணை விற்பனை செய்து முறைகேடு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்தை கேட்டுக்கொண்டனா்.