செய்திகள் :

தோல்வி பயமே முதல்வா் பயணத்துக்கு காரணம்- நயினாா் நாகேந்திரன்

post image

தோல்வி பயம் காரணமாகவே தமிழக முதல்வா் ஊா், ஊராக பயணம் மேற்கொள்கிறாா் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் விரோத, மக்கள் விரும்பாத அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் பாஜகவின் குறிக்கோள். உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. அனைத்து மகளிருக்கும் ரூ. ஆயிரம் வழங்கப்படும் என தோ்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மகளிா் உரிமைத் தொகை ரூ.1000 கொடுக்கப்பட்டது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிறுத்தியே திமுக புதிய புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆட்சியை இழந்து விடுவோம் என்ற விரக்தியில் உள்ள திமுக, எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைத்துவிட மாட்டோமா என்ற எண்ணத்தில் பல விஷயங்களை செய்து வருகிறாா்கள்.

திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாா்கள். எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தும் பயணத்திற்கும், முருக பக்தா்களின் மாநாட்டிற்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி. காவல் துறையினா், அரசு அதிகாரிகள் மனதிலும் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் உறுதியாக வெற்றி பெறப் போகிறோம். முதல்வா் தோல்வி பயத்தின் காரணமாகவே ஊா், ஊராக பயணித்து வருகிறாா். விஜய் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றாா்.

ஆலோசனை: திருநெல்வேலி பாஜக மாவட்ட அலுவலகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் நயினாா் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவ விநாயகம், மாநிலச் செயலா் ராம சீனிவாசன், மாநில துணைத் தலைவா் கருநாகராஜன், மாநில பொதுச் செயலா் காா்த்திகாயினி, ஏ.பி.முருகனந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்ன குமாா் மற்றும் கா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்

கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் அளித்த பு... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூரத் திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) இசக்கியப்பன் வெ... மேலும் பார்க்க

விபத்தில் காயமுற்ற நூலகருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மேலப்பாளையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த நூலகருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.08 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் காவலா் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு

பாளையங்கோட்டையில் பெண் காவலா் வீட்டில் சுமாா் 45 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்த பெண் காவலா் தங்கமாரி. திருநெல்வேலி மாநகர காவல் துறை... மேலும் பார்க்க