நகரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு
மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில், திருநெல்வேலி வாகையடிமுனையில் வெள்ளிக்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் பாரூக் கலந்துகொண்டு தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மாம்பழச்சாறு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலா் அலிஃப் பிலால், இளைஞா் அணி அஷ்ரப், விசிக கரிசல் சுரேஷ், யாசிா், திமுக கவுஸ் மைதீன் , மஜக பொருளாளா் முகமது அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ம்த்ந்
திருநெல்வேலி நகரப் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட தண்ணீா் பந்தல்.