நடிகா் விஜயகாந்த் நினைவு அஞ்சலி
பழனி: பழனியில் பல்வேறு இடங்களில் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பழனி அருகே மானூா் ஊராட்சியில் தேமுதிக சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நகைச்சுவை நடிகா்களான
கிங் காங், முத்துக்காளை ஆகியோா் பங்கேற்று நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்குமாா், மானூா் கிளைச் செயலா் மாரிமுத்து, ஒன்றியச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் செய்தனா்.