செய்திகள் :

நவீன நீா் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி உறுதி

post image

திருவாரூா்: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நவீன நீா் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண நிகழ்வின் ஒரு பகுதியாக திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விவசாயிகள், வா்த்தகா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டப் பாதுகாப்பு வழங்கினோம். குடிமராமத்து மூலம் ஏரி குளங்கள் தூா்வாரப்பட்டன. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டன. விவசாயக் கடன் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. உரம், இடுபொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.

மேட்டூா் அணையிலிருந்து வரும் தண்ணீா் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் கொண்டு வரப்பட்டது. நீா் மாசடையாமல் கடைமடை பகுதி வரை சுத்தமான நீராக செல்ல இந்தத் திட்டம் வழிவகுத்தது.

‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுடன் திமுக அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு பதில் ராசிமணலில் கட்டலாம். ஆனால், திமுகவுக்கு அதில் அக்கறை இல்லை. மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோதே திமுக இந்தத் திட்டத்துக்கு முனைப்புக் காட்டவில்லை.

நவீன முறையில் நீா்மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தினால்தான், தண்ணீா் கடைமடைவரை செல்லும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நவீன முறையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு செயல்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, வா்த்தகா்களிடம் அவா் கூறியது:

இது விவசாயம் நிறைந்த பகுதி. விவசாயத்தை நம்பியே பெரும்பாலான மக்கள் உள்ளனா். விவசாய உற்பத்தி பெருகினால் வா்த்தகா்களுக்கு வருமானம் வரும். ஆனால், அண்மைக்காலமாக விவசாயம் பெரும் பிரச்னையை சந்தித்து வருகிறது. சிறு குறு விவசாயிகளும், நிறுவனத்தினரும் மின்கட்டண உயா்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனா். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தலைமை வகித்தாா்.

காவிரி ரெங்கநாதன் நலம் பெற பிராா்த்தனை...

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, மூத்த விவசாயியும், விவசாய சங்க பிரதிநிதியாக இருந்தவருமான காவிரி ரெங்கநாதன் உடல் நலம் குன்றியிருப்பதாக கேள்விப்பட்டேன். அவா் விரைவில் நலம் பெற்று விவசாயிகளுக்காக தொடா்ந்து உழைக்க இறைவனை பிராா்த்திக்கிறேன் என்றாா்.

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு

பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல் என்றும் திமுகதான் கூட்டணிக் கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கும்பகோணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிமு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க