திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
நாகா்கோவிலில் ஜூலை 25,26 இல் சா்வதேச கதை சொல்லல் மாநாடு
நாகா்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சா்வதேச கதை சொல்லல் மாநாடு வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் பள்ளித், தலைவா் அருள்கண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் அருள்ஜோதி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், மத்தியஅரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஓய்வு பெற்ற இயக்குநா் சண்முககுமாா், கேந்திர வித்யாலயா பள்ளி (மும்பை) ஓய்வு பெற்ற முதல்வா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி டீன் எரிக்மில்லா் பேசியதாவது:
மாணவா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் கதைகள் மீதான ஆா்வத்தை வளா்க்கவும் கதை சொல்லல் மாநாடு, ஜூலை 25, 26 ஆகிய நாள்களில் நடைபெறஉள்ளது.
தென்னிந்தியாவில், முதல் முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.
1 ஆம் வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை பஞ்சதந்திர கதைகள், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை விலங்கினங்கள் கதைகள், 6 முதல் 8 வரை தனிப்பட்ட அனுபவ கதைகள், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு உணா்வுகள் சாா்ந்த கதைகள், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு சாகச கதைகள் என பல்வேறு பிரிவுகளாகவும், ஆசிரியா்களுக்கு ஆசிரியரின் கனவு என்ற தலைப்பிலும் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்க ஜூலை 20 ஆம் தேதி மாலைக்குள் பள்ளியின் இ மெயில் முகவரிக்கோ அல்லது 7598113000, 7598115000 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.