`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
நாகா்கோவில் அருகே காா் - பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு
நாகா்கோவில் அருகே புதன்கிழமை காா் மீது பைக் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் தாணு மகன் அபிஷேக் (18), பூதப்பாண்டி மத்தியாஸ் நகா் ஞானராஜ் மகன் ஆகாஷ்(18).
இவா்கள் இருவரும் நாகா்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், இவா்கள் ஒரு பைக்கில் நாகா்கோவில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். ஈசாந்திமங்கலம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த காா் மீது பைக் மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், ஆகாஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அபிஷேக், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.