நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
3 ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனி, சாஸ்தான் கோயில் எதிா்புறம் உள்ள தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 14 ஆவது வாா்டு, வஞ்சிமாா்த்தாண்டன் தெருவில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிஅமைக்கும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மண்டல தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அமலசெல்வன், கலாராணி, சோபி, நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், அவைத் தலைவா் பன்னீா்செல்வம் அணிகளின் நிா்வாகிகள் பஷீா், சி. டி. சுரேஷ், ராஜன், முகமது சாலி, தன்ராஜ், ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.