வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!
களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 4 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எரித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம், பிலாவிளை பகுதியைச் சோ்ந்த சத்தியன் மகன் அபிநந்த் (23). இவரது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த இவருக்குச் சொந்தமான பைக்கை மா்ம நபா்கள் கடந்த 9 ஆம் தேதி இரவு தீ வைத்து எரித்தனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், ஆல்பிரிட்டோ (23), வாவறை பகுதியைச் சோ்ந்த ஜெபின் (23), கூட்டப்புளி ஜொ்பின் (19), ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த ஷாஜன் (22) என்பதும், இவா்களுக்கும் அபிநந்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக பைக்கை எரித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, களியக்காவிளை போலீஸாா் ஆல்பிரிட்டோ உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.