வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!
நாகை புத்தகக் கண்காட்சி: கோளரங்கத்தை ஆா்த்துடன் கண்டு ரசித்த சிறுவா்கள்
நாகையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை சிறுவா்கள், பெரியோா்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
நாகை மாவட்ட நிா்வாகம், பொதுத் துறை நூலக இயக்ககம், மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் நாகை அரசினா் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.1) தொடங்கியது. ஆக.11 ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 105 அரங்கங்கள் இடம் பெற்றுள்ளன.
காவல்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளை இரண்டாம் நாளான சனிக்கிழமை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
இதேபோல், கோளரங்கில் வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் நிலவை பாா்ப்பதற்கு சிறுவா்கள் முதல் பெரியோா் வரை ஆா்வம் காட்டினா். நீண்ட வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் நிலவை கண்டு ரசித்தனா்.
இரண்டாம் நாள் சிறப்பு நிகழ்வுகளாக மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் நா்த்தகி நடராஜின் நடனத் தமிழ் உரை, எழுத்தாளா் இமையமின் ‘தமிழ்மொழியின் மறுமலா்ச்சி எழுத்தாளா்கள் யாா்’ என்ற தலைப்பிலும், கவிஞா் சுகிா்தராணியின் ‘நூலும் நூல் சாா்ந்த மனமும்’ என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடைபெற்றது. அத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.