மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
நாகையில் நாளை வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
நாகப்பட்டினம்: நாகையில் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நாகை புதிய பேருந்து நிலைய அவுரித்திடலில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் (ம) கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் புதன்கிழமை காலை 9 மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படும் டிராக்டா்கள், நெல் அறுவடை இயந்திரங்கள், ரோட்டவேட்டா், விதை விதைக்கும் கருவி, விசை களையெடுக்கும் கருவி, விசைத் தெளிப்பான்கள், ட்ரோன் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் முகவா்கள் மற்றும் வேளாண்மைப் பொறியாளா்கள் மூலம் இயக்குதல்.
பராமரித்தல், செய்யக்கூடியது, செய்யக்கூடாதது, மசகு எண்ணெய், உய்வுப் பொருள்கள் பயன்பாடுகள், வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
மேலும், முகாமில் பங்கேற்கும் இளைஞா்களை, வேளாண்மைப் பொறியியல் துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாடு பயிற்சியில் சோ்ந்து பயன்பெற ஊக்குவிக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.