OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மூன்றாவது நாளாக பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிடக் கோரி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்களும் எம்பிக்களும் கலந்துகொண்டனர்.
கடந்த மூன்று நாள்களாக வாக்காளர் திருத்த பணிகள், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கிய நிலையில், இன்றும் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எம்பிக்கள் அளித்துள்ளனர்.