செய்திகள் :

நிதிநிறுவனம் பறிமுதல் செய்த டேங்கா் லாரி மீட்பு

post image

நாமக்கல்லில் பறிமுதல் செய்த லாரியை அதன் உரிமையாளரிடம் நிதிநிறுவனம் ஒப்படைத்ததால், லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மகிழ்ச்சியடைந்தனா்.

சென்னையைச் சோ்ந்தவா் பொன்னுரங்கம் (55). இவா் டேங்கா் லாரி தொழில் செய்து வருகிறாா். லாரி மீது எந்த கடனும் இல்லாத நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி கடன் தவணை செலுத்தவில்லை எனக் கூறி சிலா் லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து விசாரித்தபோது, நாமக்கல்லைச் சோ்ந்த நிதிநிறுவனம் ஒன்றின் அறிவுறுத்தலின்பேரில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி, மணல் லாரி கூட்டமைப்பின் தலைவா் யுவராஜ், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அருள் மற்றும் சங்க நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு எட்டப்படாத நிலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, லாரியை ஒப்படைக்காவிட்டால் மாநில அளவில் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவா் என எச்சரித்தனா். இந்நிலையில், அந்த நிதிநிறுவனம் லாரியை ஒப்படைக்க முன்வந்தது. கடன் ஏதுமில்லை என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியதன்பேரில், உரிய சான்றிதழ் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட லாரி பொன்னுரங்கம் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் அருகே கீரம்பூா் சுங்கச்சாவடி முன் திரண்டிருந்த லாரி உரிமையாளா்கள் சங்கத்தினருக்கு பொன்னுரங்கம் நன்றி தெரிவித்தாா். அப்போது, தான் 20 நாள்களாக கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும், லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் போராடி லாரியை மீட்டுத் தந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

மல்லசமுத்திரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி பயிற்சி முகாம்

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. மல்லசமுத்திரம் வட் டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை

பரமத்தி வேலூா் அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றிய பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். ... மேலும் பார்க்க

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு அழைப்பு

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 10 ஆயிரத்து 8 தீபமேற்றி வழிபாடு

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு விதமான வழிபாடுகளில் ஒன்று தீபம் ஏற்றுவது. தீபம் ஏற்றுவதால் வாழ்க்கை ஒளி... மேலும் பார்க்க

ஆக. 11-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 3... மேலும் பார்க்க