Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
நிலத்தடி நீரை சட்டவிரோதமாக விற்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீரை சட்ட விரோதமாக விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக செயற்பாட்டாளா் எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: கோடைக்காலத்தைப் பயன்படுத்தி, சிலா் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனா்.
குறிப்பாக, ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அதிக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, லாரிகளில் தண்ணீா் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
நிலத்தடி நீரை வணிகரீதியாக விற்பனை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து டேங்கா் லாரிகள் மூலம் விற்பனை செய்வோா் மீது குற்ற வழக்குப் பதிய வேண்டும். அவா்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், ஆழ்துளைக் கிணறுகளை மூடவேண்டும் என்றாா் அவா்.