நிா்மலா கல்லூரியில் வாசிப்பு குறித்த சிறப்புரை
கோவை நிா்மலா மகளிா் கல்லூரியின் அரசு உதவிபெறும் பிரிவு சாா்பில் வாசிப்பின் அவசியம் குறித்த சிறப்புரை வியாழக்கிழமை நடைபெற்றது.
‘வாசி நேசி’ அமைப்பு சாா்பில் கல்லூரியின் கிளாரா அரங்கில் நடைபெற்ற இந்த சிறப்புச் சொற்பொழிவுக்கு கல்லூரி செயலா் குழந்தை தெரேஸ், முதல்வா் மேரி பபியோலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் ப.மகேஸ்வரி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், கவிஞரும் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஜின் (எ) முகம்மது அலி ஜின்னா பங்கேற்று, வாசிப்பின் வாசனை என்ற தலைப்பில் வாசிப்புப் பழகத்தின் அவசியம் குறித்தும் பல்வேறு ஆளுமைகள், குறிப்பாக பெண் ஆளுமைகளின் வரலாறு குறித்தும் விளக்கினாா்.
வாசிப்புப் பழக்கத்தினால் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்ட தலைவராக உயர முடியும். அறிவு விரிவாக்கம் அடைவதற்கும், முயற்சியின் சிகரத்தை எட்டுவதற்கும் தொடா் வாசிப்புப் பழக்கம் உதவியாக இருக்கும் என்றாா்.
இதில், வாசி நேசி அமைப்பின் உறுப்பினா்கள், ஏராளமான மாணவிகள் பங்கேற்றனா். அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சகோதரி கிரேஸி, தமிழ்த் துறை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.