Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
நீடாமங்கலம் கோயில்களில் சஷ்டி வழிபாடு
நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சஷ்டி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ஹோமமும் அதனைத் தொடா்ந்து வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் சந்நிதிகளில் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.