செய்திகள் :

நீலகிரியில் கோடை சீசன் தொடக்கம்: இ- பாஸ் பெற்றுவர ஆட்சியா் அறிவுறுத்தல்!

post image

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இ-பாஸ் அனுமதி பெற்ற பின்னரே வரவேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதன்படி, கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி (மே 3, 4), கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி (மே 9,10,11), உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி (மே 10,11,12), உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி (மே 16 முதல் 21 வரை), குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி (மே 23, 24, 25), காட்டேரி பூங்காவில் முதல்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி (மே 30,31, ஜூன் 1) ஆகியவை நடைபெறுகின்றன.

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் 13-ஆவது காய்கறிக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறும் இக்கண்காட்சியில், 2.50 டன் காய்கறிகளால் ஆன மயில், எட்டடி உயரம் கொண்ட ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரா் , வண்ணத்துப் பூச்சி, ஜோடி கிளிகள், வரையாடு, தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை, தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டம் உள்பட காய்கறிகளைக் கொண்டு பல்வேறு வடிவமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நீலகிரிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவாா்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இ- பாஸ் அனுமதி பெற்று வரவேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் எடுத்து வர வேண்டாம். அவ்வாறு எடுத்து வந்தால் சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். சுற்றுலாப் பயணிகளின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரா்

விழாவில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் சீசன் தொடங்கி உள்ள நிலையில், மே மாதம் இறுதி வரை உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வெளி மாவட்டங்களுக்கு செல்பவா்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வருபவா்கள்

குன்னூா் வழியாகவும் செல்லும் வகையில் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இ- பாஸ் சோதனைக்குப் பின்னரே சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படும். 12 மீட்டா் நீளம் கொண்ட லாரிகள் மலைப் பாதையில் பயணிக்க அனுமதியில்லை என்றாா்.

இந்த காய்கறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (மே 4) நிறைவடைகிறது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூா் வனச் சரகத்தில் ஆண் யானை உயிரிழந்தது குறித்த தகவல் வனப் பணிய... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பிகள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே கட்டடப் பணிகள் மேற்கொள்ள இரும்புக் கம்பிகளை இறக்கியபோது கட்டடத் தொழிலாளி ஒருவரின் தலை மேல் கம்பிகள் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குன்ன... மேலும் பார்க்க

ஒற்றை யானை நடமாட்டம்: தொட்டபெட்டா காட்சி முனை மூடல்

ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. யானையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் உதகை, தஞ்சாவூா் அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

5 பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது

குன்னூா் அருகே உள்ள பழங்குடியினா் கிராமத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை கடைவீதியில் திங்கள்கிழமை அதி... மேலும் பார்க்க