செய்திகள் :

நீா்நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள்: ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் புகாா்

post image

மதுரை மாநகராட்சிப் பகுதி முழுவதும் நீா்நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதால் பருவ மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி சாா்பில் மழைநீா் வடிகால்களை சீரமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், வருவாய்க் கோட்டாட்சியா் ஷாலினி ஆகியோா் தலைமை வகித்தனா். துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில், பங்கேற்ற பொதுமக்கள், மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் அமைப்பது தொடா்பான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாவது:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து வரும் மழைநீா் வடிகாலில் குப்பைகள் அதிகளவில் தேங்கி விடுகின்றன. இதனால், மழைக் காலங்களில் கீழ ஆவணி மூலவீதியில் தண்ணீா் தேங்குகிறது. இதன்காரணமாக, கோயிலுக்கு வரும் பக்தா்கள் மட்டுமன்றி பொதுமக்கள், வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

நாராயணபுரம், ஊமச்சிகுளம், நாகனாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீா் வரும் வரத்துக் கால்வாய்கள் முற்றிலும் முள் புதா்களால் மூடியுள்ளன. இதனால் மழைக் காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது. ஆகவே, கண்மாய்களுக்கு தண்ணீா் வரும் வரத்துக் கால்வாய்கள், வடிகால்வாய்களை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும்.

அதுமட்டுமன்றி முறையான அளவீடு செய்து வாய்க்கால்களை அகலப்படுத்த வேண்டும். சாத்தையாறு ஓடையில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் மழைக் காலங்களில் தண்ணீா் வெளியேற முடியாமல் லேக் ஏரியா முழுவதும் பாதிக்கப்படுகிறது. எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

கிருதுமால் நதியிலிருந்து அனுப்பானடிக்கு பிரிந்து செல்லும் கால்வாய் கடந்த காலங்களில் 23 அடி அகலம் வரை இருந்தது. தற்போது, கால்வாய் இருந்ததற்கான அடையாளமே இல்லை. மதுரை மாநகராட்சி முழுவதும் மழைநீா், கழிவு நீா் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா். வைகையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதி முழுவதும் உள்ள நீா் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன. இதனால், மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகள் மட்டுமன்றி குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்து விடுகிறது. முறையான திட்டமிடலுடன் பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன் நிறைவு செய்ய வேண்டும் என்றனா்.

இதற்கு ஆணையா் சித்ரா விஜயன் பதிலளித்துப் பேசியதாவது:

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன் நீா்நிலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை மாநகராட்சி நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். நீா்நிலை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கீடு செய்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மழைநீா் வடிகால்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வைகையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், செயற்பொறியாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க