செய்திகள் :

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா!

post image

நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஆண்டுதோறும் வருஷாபிசேக விழா நடைபெறுவது வழக்கம். 7வது ஆண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று காலையில் நடைபெற்றது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அம்பாள் சன்னதியில் 1008 சங்குகளும் சுவாமி சன்னதியில் 108 கலசம் வைத்தும் சிறப்பு ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. காலை 9.00.மணிக்கு மேல் 10.30. மணிக்குள் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் ஸ்ரீ ஆறுமுக நயினார், மூல மகாலிங்கம் உள்ளிட்ட சன்னதி விமானங்களுக்கு வருஷாபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற திரைப்படம் வெளியானது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வா... மேலும் பார்க்க

ஐயாறப்பர் கோயிலில் தேரோட்டத் திருவிழா!

பிரசித்தி ஐயாறப்பர் திருக்கோவிலில் சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையா... மேலும் பார்க்க

தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன... மேலும் பார்க்க

ஆனந்தக் கண்ணீரில் ஆண்டனி..! கான்பிரன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் பெட்டிஸ்!

ஐரோப்பிய கான்பிரன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ரியல் பெட்டிஸ் அணி முன்னேறியது.பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆண்டனி தற்போது ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வந்தபிறகு ரியல் இந்த ... மேலும் பார்க்க

திருமண நிகழ்வில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன்..!

நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றது கவனம் ஈர்த்துள்ளது.ஜெயம் திரைபடத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் ரவி. பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிற... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் திருத்தேரோட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருத்தேரில் குரு பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயில் ... மேலும் பார்க்க