நெல்லையப்பா் கோயிலில் மோட்ச தீப வழிபாடு
ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதலில் பலியானோருக்காக திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மோட்ச தீபமேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த 23 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலில் பலியானோருக்காக திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் மோட்ச தீபமேற்றி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.