செய்திகள் :

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

post image

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் தலைவிரித்தாடும் ஊழல், பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்தும் இளைஞர்கள் இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் காத்மண்டுவில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இளைஞர்களின் போராட்டம் அரசுக்கு எதிரான வன்முறையாக மாறிய நிலையில், நேற்றிரவு சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

இருப்பினும், பிரதமரை பதவி விலக வலியுறுத்தி இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள், நாடாளுமன்றம், அமைச்சரவைக் கட்டடங்கள், அரசு அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இந்த நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக பிரதமர் சர்மா ஓலி அறிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியை நேபாள ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். ராணுவத்தின் ஹெலிகாப்டர் பிரதமரின் இல்லத்தில் தரையிறங்கியுள்ளது.

மேலும், நேபாள அமைச்சர்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே, உள்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் அவர்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, வங்கதேசத்தை போன்று இடைக்காலமாக ராணுவ ஆட்சி கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharma Oli leaves Nepal

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இ... மேலும் பார்க்க

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி புதன்கிழமை கூறுகைய... மேலும் பார்க்க

புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்து... மேலும் பார்க்க

கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்

கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு ந... மேலும் பார்க்க