சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
கரூா் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்தது.
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு சிறிது நேரத்திலேயே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
தொடா்ந்து சாரல் மழை பலத்த மழையாக மாறியதால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
குறிப்பாக, நொய்யல், குறுக்குச்சாலை, உப்புபாளையம், மரவாபாளையம், குந்தாணி பாளையம், குளத்துப்பாளையம் ,வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் , புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம் , பாலத்துறை, காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
பகலில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலையில் மழை பெய்து குளிா்ந்த சீதோஷ்ண வானிலை உருவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.