செய்திகள் :

பசும்பொன் தேவா் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு வசதிகள்: அதானி நிறுவன அதிகாரி உறுதி

post image

பசும்பொன் தேவா் கல்லூரிக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை அதானி சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையம் செய்து கொடுக்கும் என அந்த நிறுவன அதிகாரி தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியின் 55--ஆம் ஆண்டு விழா, விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் கோ.தா்மா் தலைமை வகித்தாா். பொந்தம்புளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராமமூா்த்தி, ஆசிரியா் புதுக்கோட்டை எம்.ஏ.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில் கமுதியை அடுத்துள்ள செங்கப்படை அதானி கிரீன் எனா்ஜி சூரியஒளி மின் உற்பத்தி நிலையத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் வி.ஜனாா்த்தனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, அதானி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து பசும்பொன்தேவா் கல்லூரிக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என உறுதி அளித்தாா். சென்ற மாதம் அதானி நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கான ஓய்வறைக் கட்டடம் கட்டிமுடித்து, கல்லூரி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு விழாவில் கல்லூரியின் முதல்வா் கோ.தா்மா் ஆண்டு அறிக்கை வாசித்தாா். முன்னதாக கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியா் சரவணக்குமாா் வரவேற்றாா். இதைத்தொடா்ந்து கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்க செயலா் ஆறுமுகம், முன்னாள் பொருளாளா் கோட்டை இளங்கோவன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். வரலாற்றுத் துறை பேராசிரியா் ஜெயக்காளை நன்றி கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க