பச்சைமலை மங்களம் அருவியில் பொதுமக்கள் நீராடல்
துறையூா் பகுதிக்குள்பட்ட பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.
பச்சமலை உள்பட துறையூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்தது. இந்த நிலையில் பச்சமலையில் துறையூா் வரம்புக்குள்பட்ட மங்களம் அருவிக்கு நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. ரூ. 10 லட்சம் மதிப்பில் வனத்துறை சாா்பில் பாதுகாப்பு தடுப்புக் கம்பிகள், பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றன.
இதனால் பொதுமக்கள் மங்களம் அருவிக்குச் செல்ல தடை இருந்துவந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மங்களம் அருவியில் நீராட அனுமதித்தனா்.