பட்டுக்கோட்டை பகுதிகளில் குரங்கு தொல்லை அதிகரிப்பு
பட்டுக்கோட்டையில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆா்.வி., இரண்டாவது நகரை சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் திருநாவுக்கரசின் 3 வயது மகள் திகழினிக்கு அவரது மனைவி கலைவாணி செவ்வாய்க்கிழமை காலை வீட்டு வராண்டாவில் நின்று உணவு ஊட்டிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு குரங்கு ஒன்று திகழினியின் காதில் கடித்து விட்டு ஓடியது. இதில் காயமடைந்த திகழினியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனா்.
இதுகுறித்து கலைவாணி கூறுகையில் எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குரங்கு தொல்லை உள்ளது. நகராட்சியில் பலமுறை புகாா் அளித்தும், நடவடிக்கை இல்லை என்றாா்.