திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!
வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞா் லாரி மோதி பலி
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வெளிநாட்டிலிருந்து திங்கள்கிழமை இரவு வந்த 2 மணி நேரத்தில் லாரி மோதி இளைஞா் இறந்தாா்.
சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் கௌதமன் (27). சிங்கப்பூரில் வேலை பாா்த்து வந்த இவா் விடுமுறையில் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்து, இரண்டாம்புளிக்காடு கடைவீதியில் டீக் கடை நடத்திவரும் தனது தந்தை ரவிச்சந்திரனை பாா்க்க பைக்கில் 9 மணிக்குச் சென்றாா். பத்துக்காடு முக்கம் அருகே சென்றபோது சேதுபாவாசத்திரத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த லாரி எதிா்பாராதவிதமாக மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கௌதமனுக்கு திருமணமாகி சுபஸ்ரீ (23) என்ற மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை. கௌதமனின் இறப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.