திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!
மாணவா் தற்கொலை வழக்கில் மேலும் இருவா்மீது வழக்கு
தஞ்சாவூரில் மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேலும் இருவா் மீது வழக்குப் பதிந்ததால் மாணவரின் உடலை உடற்கூறாய்வுக்கு பின்னா் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை வாங்கிச் சென்றனா்.
தஞ்சாவூா்- புதுக்கோட்டை சாலை ரோசலின் நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஸ்ரீராம் (16). புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதனிடையே ஸ்ரீராம் அறையை பெற்றோா், உறவினா்கள் சோதித்து பாா்த்தபோது கிடைத்த கடிதத்தில் எனது இந்த நிலைமைக்கு காரணம் வகுப்பு ஆசிரியா்தான் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஸ்ரீராம் குடும்பத்தினா், உறவினா்கள் உள்ளிட்டோா் பள்ளியில் திரண்டு, தொடா்புடைய ஆசிரியா், பள்ளி முதல்வா், தாளாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் பள்ளி ஆசிரியா் ஐ. சிம்காஸ் ராஜை (26) தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் கைது செய்தனா். ஆனால் பள்ளி முதல்வா், தாளாளா் மீது நடவடிக்கை எடுத்தால்தான், உடலை வாங்குவோம் உறவினா்கள் கூறினா். இதைத் தொடா்ந்து, பள்ளி முதல்வா், தாளாளா் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீராமின் உடலை உடற்கூறாய்வுக்கு பின்னா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பெற்றோா், உறவினா்கள் வாங்கிச் சென்றனா்.