லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் தற்கொலை முயற்சி
நிலக்கோட்டை அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், கூட்டுறவு வங்கிச் செயலா் செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த சிவஞானபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அணைப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (52) செயலராக இருந்து வருகிறாா்.
இந்தக் கூட்டுறவு வங்கியில் கடந்த 2015-ஆம் ஆண்டு, சிவஞானபுரம் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பெயரில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சிறு தொழில் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.
தற்போது, இந்தக் கடன் தொகை பெற்றவா்களுக்கு வட்டியும், அசலும் சோ்த்து பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நோட்டீஸ் பெற்றவா்கள் தாங்கள் வாங்காத கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு, செலுத்த சொல்வதாகக் கூறி, சிவஞானபுரம் கூட்டுறவு வங்கிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து மாவட்ட மாவட்ட கூட்டுறவு வங்கி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கம் கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ராஜமாணிக்கம் விஷம் அருந்தி மயங்கினாா். இதையடுத்து, அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.