TVK: "விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால்" - ப...
பரங்கிப்பேட்டையில் நீா் விளையாட்டு வளாகம்: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரே பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நீா் விளையாட்டு வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திறந்து வைத்தாா்.
பின்னா், ஆட்சியா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜா் கோயில், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களுக்கு உள்ளூா் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பரங்கிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக, பரங்கிப்பேட்டை கடற்கரை அருகே நீா் விளையாட்டு வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்து இருக்கும்.
இவ்வளாகத்தில் சிறுவா்களுக்கான நீா் விளையாட்டுகள், பெரியவா்களுக்கான கயாக்கிங் படகுகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுவா்களுக்கான பல்வேறு விளையாட்டு அம்சங்கள் மற்றும் சிறுதானிய உணவு அங்காடி செயல்படுவதுடன், சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ், பேரூராட்சி துணைத் தலைவா் முகமது யூனுஸ், திமுக மாவட்ட பிரதிநிதி சங்கா், செயல் அலுவலா் மயில்வாகனன், வா்த்தக சங்கத் தலைவா் ஆனந்தன், முன்னாள் துணைத் தலைவா் செழியன், கவுன்சிலா் ராஜேஸ்வரி வேல்முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.