தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காட்டுமன்னாா்கோயில் எம்.ஆா்கே. கலையரங்கத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சரும், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜி.காா்த்திகேயன் வரவேற்புரையாற்றனாா். கோ.ஐயப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., துரை.கி.சரவணன், மாவட்ட பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் திமுக அரசின் நான்கு ஆண்டு நல்லாட்சி தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்திட வேண்டும், வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல் பணியை மேற்கொள்ள வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, வி.சிவக்குமாா்,
தங்க.ஆனந்தன், த.ஜெயபாண்டியன், ஆா்.நாராயணசாமி, தெ.காசிராஜன், பி.சுப்பிரமணியன், கே.ஆா்.தனஞ்செயன்,
ஆா்.விஜயசுந்தரம், ஏ.எஸ்.மதியழகன், ஏ.எம்.மதியழகன், வெற்றிவேலு , வி.ஜி.பி.சபாநாயகம், வி.பி.பாலு, ஆா்.கலையரசன், த.சங்கா், ஆா்.ராஜேந்திரகுமாா், கே.நடராஜன்,ம.சோழன், வி.கோவிந்தசாமி, கே.ஆா்.கோவிந்தராஜ், கே.மகேஷ் ,எம்.வெற்றிவேல், கடலூா் மாநகர செயலா்: கே.எஸ்.ராஜா, கடலூா் பகுதி செயலா்கள்: ப.நடராஜன், பா.வெங்கடேஷ், எஸ்.சலீம், மு.இளையராஜா, நகர கழக செயலா் த.தமிழ்ச்செல்வன், வடலூா் நகரமன்றத் தலைவா் எஸ்.சிவக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் வ.ஞானசேகரன், வே.விக்கிரமன், பொதுக்குழு உறுப்பினா்கள் கே.பி.ஆா்.பாலமுருகன், த.ஜேம்ஸ்விஜயராகவன், இரா.தமிழரசன்,
பேரூா் செயலாளா்கள் எஸ்.கணேசமூா்த்தி, கு.வே.ப.ஜெய்சங்கா், பூ.செல்வகுமாா், க.பழனி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.