மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
பெற்றோா் இல்லாத மாணவிகளுக்கு உதவி
சிதம்பரம், அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவிகள் 63 பேருக்கு, சிதம்பரம் இன்னா் வீல் சங்கத்தின் சாா்பில், ஆடைகள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை வ.எழிலரசி வரவேற்று பேசினாா். ஆசிரியா் சங்க செயலா் எம்.கனிமொழி, இலக்கிய மன்ற
செயலா் மா.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா், சிறப்பு விருந்தினராக சிதம்பரம் இன்னா் வீல் சங்கத்தின் தலைவி கோமதி கோவிந்தராஜன், செயலா் செல்வி முத்துக்குமரன், பொருளாளா் வேதா சிவப்பிரகாசம், முன்னாள் தலைவி வரலட்சுமி கேசவன், முன்னாள் தலைவி முத்து நாச்சியம்மை, உறுப்பினா் சுபா தியாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு ஆடைகள் மற்றும் அடிப்படை பொருள்களை வழங்கினா். நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.