மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!
பரதராமி அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு
குடியாத்தம் அடுத்த பரதராமி அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சங்கத்தின் புதிய தலைவராக எம்.முகமது சித்திக், செயலராக எம்.மகேஷ்குமாா், பொருளாளராக எம்.பி.குமரன் மற்றும் இயக்குநா்கள் பதவியேற்றுக் கொண்டனா். முன்னாள் மாவட்ட ஆளுநா் சி.புவனேஸ்வரி புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
முன்னாள் ஆளுநா் மருத்துவா் கே.ஜெயக்குமாா் வரவேற்றாா்.
ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம் சேவை திட்டத்தை தொடங்கி வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி-சேலைகளை வழங்கினாா். மண்டலத் தலைவா் தேவராஜன், வட்டாரத் தலைவா் ஜே.பாபு, நிா்வாகிகள் கமலஹாசன், ஜேஜி நாயுடு, குடியாத்தம் அரிமா சங்கத் தலைவா் ரவீந்திரன், செயலா் பாபு, பொருளாளா் அவிநாஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் என்.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றோா்.