ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தி...
பரதராமியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
குடியாத்தம் ஒன்றியம், பரதராமி மற்றும் புட்டவாரிபல்லி ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உளுந்து, துவரை விதைகள் இலவசமாகவும், நிலக்கடலை விதை 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டன.
வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், வேளாண்துறை முகாம் கண்காணிப்பாளா் வி.ஜெயகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா் மஞ்சுநாதன், ஊராட்சித் தலைவா்கள் பி.கேசவவேலு, எஸ்.கிருஷ்ணமூா்த்தி, திமுக நிா்வாகிகள் கே.சேகா், ஏ.ஜே.பத்ரிநாத், கே.எம்.அன்சா், மேஷாக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.