பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
புகையிலைப் பொருள்களை கடத்தியவா் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஒரு லாரியிலிருந்து இறங்கி மலைப் பாதையில் தலையில் மூட்டையுடன் நடந்து வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா் திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட ஆரிப் நகரைச் சோ்ந்த ரியாஸ் அகமத் (42) என்பதும், அவா் தலையில் வைத்திருந்த மூட்டையில் 1,000- க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான புகையிலைப் பொருள்கள் இருந்ததும் தெரிய வந்தது. அதை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து அவா் கடத்தி வந்துள்ளாா்.
இதையடுத்து பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து அவரை சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.