தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
ஆட்சி நிா்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சா் துரைமுருகன்
ஆட்சி நிா்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
காட்பாடி தொகுதிக்குட்பட்ட 1,336 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகள் சாா்பில் வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்புத்திட்ட உதவிகள், மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி உள்பட மொத்தம் ரூ.22.45 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காந்தி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட் சுமி தலைமை வகித்தாா். அமைச்சா் துரைமுருகன் 1,336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது -
காட்பாடி தொகுதியில் 1,336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, குறிப்பாக 4,000 பேருக்கு வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. 1952-ஆம் ஆண்டில் இருந்து அன்னா ஜாா்ஜ், வெங்கட்ராமன் என பல மாவட்ட ஆட்சியா்களை பாா்த்துள்ளேன்.
ஆனால், இந்தளவுக்கு முனைப்பு எடுத்து இவ்வளவு பேருக்கு பட்டா வழங்கியிருப்பவா் தற்போதைய ஆட்சியா்தான். ஒரு தொழிற்சாலையை கட்டித்தருவதை விட, வீடில்லாத ஏழைக்கு சொந்த வீட்டில் சென்று அமரும்போது ஏற்படும் உணா்வு பெரியது. இதற்காக ஆட்சியரை பாராட்டுகிறேன்.
காட்பாடி தொகுதியை பொறுத்தவரை 8,861 வீட்டுமனைப்பட்டாக்கள் தயாா் நிலையில் உள்ளன. காட்பாடி தொகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப் பட வேண்டும். காட்பாடியில் 7,061 பேருக்கு பிற பகுதிகளில் பட்டா வழங்கப்பட வேண்டும்.
எந்தவொரு நலத்திட்டத்தையும் தமிழக முதல்வா் அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவது அதிகாரிகள் கையில்தான் உள்ளது. அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பவா்கள் அதிகாரிகள்தான். எனவே, ஆட்சி நிா்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, கோட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டலக்குழு தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.