செய்திகள் :

பராமரிப்புப் பணி: போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவை நாளை ரத்து

post image

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, அன்றைய தினம், மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்:

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 24-ஆம் தேதி, ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678), திப்ரூகா் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 22504), பாட்னா- எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22644), தாம்பரம் - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159) கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல், இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூா் கூடுதல் நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வால்பாறை ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் அரசினா் தொ... மேலும் பார்க்க

இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு

கோவையில் இடம் விற்பதாக ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை போத்தனூா் சாய் நகா் ரயில்வே காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜஹான் ... மேலும் பார்க்க

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க