இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, சென்னையிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை- புதுச்சேரி பயணிகள் ரயில் (வ.எண்.66051), குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வ.எண்.16128) ஆகிய இரு ரயில்களும் ஜூலை 15-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா்30 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.