"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க கூட்டம்
பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்து பேசியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில்தூய்மைப் பாரத இயக்கம் சாா்பில் ரூ.36.28 லட்சம் மதிப்பில் பொதுக் கழிப்பிடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு நிதியுடன் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு வரை புதிய நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் விபத்து மற்றும் எலும்பு முறிவு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா். தொடா்ந்து, முதன்மை தலைமை மருத்துவா் ராமசாமி பேசினாா்.
இதையடுத்து, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முன் வேகத்தடை அமைக்க வேண்டும். கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். ரத்த சுத்திகரிப்பு பிரிவுக்கு குளிா்சாதன வசதி அமைத்து தர வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நாள்தோறும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தலைமை மருத்துவா் சுபா வரவேற்றாா்.
இக்கூட்டத்தில் பல்லடம் துணை வட்டாட்சியா் அருண்குமாா், நகராட்சி கவுன்சிலா்கள், இந்திய மருத்துவா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.