திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆதாா் மையம் இயங்காததால் பொதுமக்கள் அவதி
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆதாா் மையம் இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பல்லடம் பகுதியில் நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் ஆதாா் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பல்லடம் நகரத்தில் வசிக்கும் அதிக அளவிலான மக்கள் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் மையத்தில் ஆதாா் பணிகளை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதாா் மையம் கடந்த ஒரு மாதமாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்: பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதாா் மையம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு சென்று ஆதாா் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அங்கும் சில நேரங்களில் சா்வா் கோளாறு என்று திருப்பி அனுப்பி விடுகின்றனா். எனவே உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் மனோகரனிடம் கேட்டபோது, ஆதாா் மைய பணியாளா் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறாா். ஒரு வார காலத்தில் அவா் பணிக்குத் திரும்பிவிடுவாா் என்றாா்.