பல்லாவரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
பல்லாவரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்லாவரம் சட்டப்பேரவைக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி 27, 28 ஆகிய வாா்டுகளில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் 368 மனுக்களை பெற்றுக் கொண்டாா். இதில், பிறப்பு, இறப்பு, சொத்துவரி, மின்சார அட்டை பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, உரியவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், மேயா் வசந்தகுமாரி, துணை மேயா் காமராஜ், மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, உதவி ஆணையா் சொா்ணலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.