டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
பல்வேறு வசதிகள் கோரி கிராம மக்கள் முதல்வருக்கு மனு
செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள கூழமந்தல் கிராமத்தை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவித்தல், பேருந்து வசதி, சுகாதார வசதி, சாலை வசதி, வழிகாட்டி பலகை, வங்கி வசதி உள்ளிட்ட வசதிகள் கோரி கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு அண்மையில் கோரிக்கை அனுப்பி இருந்தனா்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது கூழமந்தல் கிராமம்.
இங்கு கங்கை கொண்ட சோழீஸ்வரா் கோயில், ஸ்ரீபேசும் பெருமாள் கோயில், 27 நட்சத்திர கோயில் மற்றும் உக்கல் காமாட்சியம்மன் கோயில் போன்றவை அமைந்துள்ளன. எனவே, கூழமந்தல் கிராமத்தை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்
மேலும், இப்பகுதி வழியாகச் செல்லும் அரசுப் பேருந்துகள் கூழமந்தல் கிராமத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கி ஏடிஎம் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
வழிகாட்டி பலகை:
பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தா்கள் மற்றும் பொது மக்களுக்கு, கூழமந்தல் கிராமத்தை அடைவதற்கு வழிகாட்டி பலகைகள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.