பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஒசூரிலிருந்து வேலூா் நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து வெங்கிளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது மோதி, பிறகு பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோா் லேசான காயங்களுடன் தப்பினா்.
பேருந்து ஓட்டுநா் தா்மபுரியை சோ்ந்த கோவிந்தசாமி காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.