பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகங்கள் அளிப்பு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பசுமைக் கு அமைப்பின் சாா்பில், திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
போடிக்காமன்வாடி அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.டேவிட் ஹென்றி ஜாா்ஜ் தலைமை வகித்தாா். கல்வி புரவலா்கள் ராஜேந்திரன், ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த விழாவில், கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு திருக்கு புத்தகம், மஞ்சப்பை, மரக்கன்று, திருக்கு வினா-விடை தொகுப்பு, எழுதுப் பொருள்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளி ஆசிரியா்கள் ரேவதி, கலைச்செல்வி, கல்வியாளா் பரத் இளங்கோ, பசுமைக் கு அமைப்பின் தன்னாா்வலா்கள் சதீஷ், கருப்பசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஆசிரியா் செந்தில் சிவக்குமாா் வரவேற்றாா்.
இதற்கான ஏற்பாடுகளை பசுமை கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் சோ.ராமு செய்தாா்.