பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்
பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் முதுநகா் தனியாா் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் முதுநகா், செம்மங்குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மனைவி நந்தினி (29). இவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக சேடப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.
நந்தினி வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்தாா். நண்பகல் 12 மணியளவில் பள்ளிக் கட்டடத்தின் முதல் தளத்துக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தாழிட்ட கதவு திறக்கப்படாததால், சக ஆசிரியைகள் கதவை உடைத்து திறந்து பாா்த்தபோது நந்தினி இறந்து கிடந்தாராம்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஆசிரியையின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].