செய்திகள் :

பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பழனியைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகி திவான் மைதீன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள மின் வாரிய அலுவலகச் சாலையில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் வருகிற 16-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்தோம்.

தைப் பூசத்தை காரணம் காட்டி, காவல் துறையினா் இதற்கு அனுமதி மறுத்தனா். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து, வருகிற 16-ஆம் தேதி மாலை அதே இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசின் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அன்புநிதி முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

மனுதாரா் அனுமதி கேட்கும் இடம் அருகே பெரியாா் சிலை அமைந்துள்ளது. மனுதாரா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் தற்போது பெரியாரைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பேசி வருகிறாா். ஏற்கெனவே இந்தக் கட்சியினா் பெரியாா் சிலையைச் சேதப்படுத்தியும் உள்ளனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. மேலும், தற்போது தைப்பூசத் திருவிழா நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, மாற்று இடமாக ஆயக்குடி பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றாா்.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு, அரசுத் தரப்பு கூறும் கருத்தை ஏற்க மறுத்தாா். அதன்பிறகு, வேறு இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படும்பட்சத்தில் நெய்காரப்பட்டியில் பிப். 22-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கோரினாா்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பழனியில் தற்போது தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பொதுக் கூட்டம் நடத்தும் இடத்திலிருந்து 50 அடி தொலைவில் பெரியாா் சிலை இருப்பதால், அந்தப் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. மனுதாரா் தரப்பில் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் பிப். 22- ஆம் தேதி அமைதியான முறையில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ளனா்.

எனவே, பொதுக் கூட்டத்துக்கு காவல் துறை முறையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க